மகனை சவரக்கத்தியால் வெட்டிய தந்தை கைது!

Date:

பசறை கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய தனது மகனை சவரக்கத்தியால் வெட்டிய தந்தை ஒருவர் இன்று (9) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தரெந்தபொல, பசறை கோனகெலே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தையால் சவரக் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மகன், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது இடது கை மற்றும் வயிற்றில் சவரக் கத்தியால் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தந்தை மகனை சவரக்கத்தியால் தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்