29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
மலையகம்

3 பிள்ளைகளுக்கும் விசம் பருக்கி, தானும் பருகிய தந்தை!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறையடுத்து, தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து விட்டு, கணவனும் விசமருந்தியுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தெல்பிட்டிய செவனக் காலனியில் இந்த சம்பவம் நடந்தது.

நால்வரும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 வயது சிறுவனும், 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 40 வயதுடைய தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையில் நீண்டகாலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கம்பளை பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன் மூன்று பிள்ளைகளும் தந்தையுடன் தங்கியுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த தந்தை, குழந்தைகள் கண்டுகொள்ளாமல் குளிர்பான போத்தலில் விசம் கலந்து, மூன்று குழந்தைகளையும் குடிக்க வைத்துவிட்டு, தனது அறைக்கு சென்று மதுவில் விசத்தை கலந்து அருந்தியுள்ளார்.

இரவு 11.30 மணியளவில் இரண்டு பிள்ளைகள் மற்றும் தந்தைக்கு வாந்தி எடுத்ததுடன், 13 வயது மூத்த மகள் சென்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பாவிடம் (தந்தையின் மூத்த சகோதரர்) தெரிவித்துள்ளார்.

பின்னர் அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் வீட்டினுள் விசப் போத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

விசம் அருந்துவதற்கு முன்னர் படுக்கையில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களை கணவர் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்

பாலத்திலிருந்து விழுந்த யுவதியை காப்பாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்

Pagetamil

பேருந்துக்குள் வைத்து மாணவியை அறைந்த ஆசிரியை!

Pagetamil

பிரச்சாரத்தை ஆரம்பித்த அனுஷா அணி

Pagetamil

கோடீஸ்வர வர்த்தகரையும், மகளையும் கட்டிவைத்துவிட்டு முகமூடிக் கொள்ளையர் கைவரிசை!

Pagetamil

பொகவந்தலாவையில் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!