பொலிஸ் பொறுப்பதிகாரி என குறிப்பிட்டு, கல்முனையில் உள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்று பணம் செலுத்தாமல் மது அருந்த முயன்ற, புதிதாக பணியில் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கல்முனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கைதானவர் தன்னை, எல்பிட்டிய OIC என காட்டிக்கொண்டதாகவும், குடிபோதையில் நடந்துகொண்டதாகவும் உணவக நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
ஓ.ஐ.சி ஒருவர் கட்டுக்கடங்காமல் நடந்து கொள்வதாக ஹோட்டல் நிர்வாகம் முறைப்பாடு செய்ததையடுத்து அங்கு சென்ற கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி, முதல் பார்வையில் அவர் பொலிஸ் அதிகாரி அல்ல என்பதை உணர்ந்துள்ளார்.
அவர் எல்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி அல்ல எல்பிட்டிய பொலிஸில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.