நெல்லியடியில் வீடு உடைத்து ரூ.58 இலட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு!

Date:

நெல்லியடி பொலிஸ் பிரிவில் ஆட்களற்ற வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 58 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரவெட்டி மத்தி பகுதியில் இன்று (8) மதியம் இந்த சம்பவம் நடந்தது.

தனித்து வாழும் தம்பதியினரின் வீட்டிலேயே திருட்டு சம்பவம் நடந்தது.

மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக தம்பதியினர் இன்று காலையில் சென்றுள்ளனர். மதியம் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

வீட்டு அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த 33 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 58 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்