24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரன் மடகாஸ்கரில் கைது!

தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்ரமரத்ன மற்றும் சலிந்து மல்ஷித குணரத்ன என்ற குடு சாலிடு உள்ளிட்ட 8 பேர் மடகாஸ்கரில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 8 பேரும் மடகாஸ்கரில் உள்ள Ivato சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஹரக் கட்டாவின் மனைவி என்று கூறிக்கொள்ளும் மலேசிய பெண்ணும் உள்ளடங்குகிறார்.

மார்ச் 1ஆம் திகதி ஹரக் கட்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹரக் கட்டா மற்ற ஐந்து பேர் பெப்ரவரி 12 அன்று நாட்டின் Nosy Be சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்தனர். உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, அவர்கள் மார்ச் 1 ஆம் திகதி மடகாஸ்கரை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போது, ஹரக் கட்டா ஒரு பணக்கார தொழிலதிபர் போல் காட்டிக் கொண்டார். அவர் நீல ஐரோப்பிய உடை அணிந்திருந்தார். குடு சலிந்து உட்பட ஏனைய குழுவினர் ஹரக் கட்டாவின் மெய்ப்பாதுகாவலராக தோன்றியிருந்தனர்.

இலங்கை நீதிமன்றங்களால் பெறப்பட்ட உத்தரவுகள் மற்றும் பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம், ஹரக் கட்டா உள்ளிட்ட பாதாள உலகக் குற்றவாளிகளுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பின்படி, ஹர்க் கட்டா மட்டும் மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினரால் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகள் மூலம் குடு சலிந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா மற்றும் பலர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து இரண்டு சொகுசு கார்களில் இவாடோ விமான நிலையத்திற்கு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹரக் கட்டாவின் மனைவியென கூறும் மலேசிய பெண்ணிடம் உள்ளூர் நாணயத்தில் 38 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டுபாய், மலேசியா, சிங்கப்பூர், சீஷெல்ஸ், மாலத்தீவு மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஹரக் கட்டா போதைப்பொருள் விநியோகம் செய்வதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஹரக் கட்டா உள்ளிட்டோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய சந்தேக நபர்களில் போதைப்பொருள் வலையமைப்பில் மேலும் சிலரும் உள்ளதாக இலங்கையில் உள்ள உத்தியோகபூர்வமற்ற வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த கைது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சர்வதேச பொலிஸ் பிரிவுக்கு உத்தியோகபூர்வமாக தகவல் கிடைக்கவில்லை.

சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரிடமிருந்து சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்திருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்குக் கூட இது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.

இந்த கைது தொடர்பான தகவல்களை மடகாஸ்கரில் இருந்து சர்வதேச பொலிஸாரின் ஊடாக பரிசோதித்து இந்த கைது தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உண்மைகளை உறுதிப்படுத்தியதன் பின்னர் அந்த நாட்டுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தி சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவர்களை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படலாம் என்றும், அவர்களை அழைத்துவரலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதற்கு முன், சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவிப்பின்படி டுபாய் காவல்துறையால் ஹரக் கட்டா கைது செய்யப்பட்டார். அப்போதும் கூடு சலிந்து உடன் இருந்தார். அவர்களிடம் போலி பாஸ்போர்ட் இருந்தது.

அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்குத் தேவையான சட்டப்பூர்வ ஆவணங்களை உரிய நேரத்தில் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தால், ஒக்டோபர் 3ஆம் திகதி டுபாய் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment