Pagetamil
சினிமா

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் முதல் தோற்றத்தை வெளிட்ட கமல்ஹாசன்

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று (6) வெளியிட்டார்.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர் பச்சான். நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான படைப்பாக “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் உருவாகியுள்ளது. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொள்கின்றனர். படத்தினை டி. துரை வீரசக்தி தயாரிக்கிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று(திங்கள்கிழமை) வெளியிட்டார். கமல்ஹாசனின் அலுவலகத்தில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிட்டப்பட்டது. அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர் பச்சான், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். இப்படம் குறித்து பாரதிராஜா, “தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும்” என்று கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.

படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், “தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்தபிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் பேசியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தைக் காட்டுங்கள்” என்று இயக்குநர் தங்கர் பச்சானிடம் தெரிவித்தார். மேலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திக்கும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மண் சார்ந்த மென்மையான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை பணிகளை செய்கிறார். விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment