யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி அதில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார்.
அவரது கையில் உள்ள வசனங்களை பார்வையிட்ட பொலிஸார், காதல் தோல்வியால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
குறித்த இளைஞரின் உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1