காணாமல் போன யுவதியின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியது!

Date:

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதி ஒருவரின் சடலம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள நிலையில் இன்று (04) காலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய மொஹமட் ஃபௌமின் ஷாஹ்நாம் பானு என்ற யுவதி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பேருவளை பொலிஸில் அவரது பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர்.

சிசிடிவியை பரிசோதித்தபோது, ​​​​அவர் ஒரு பிரதான வீதியில் செல்வது அவதானிக்கப்பட்ட போதும், அதன் பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதன்படி இன்று காலை பேருவளை மருதானை லெல்லம மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இருந்து அவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

மதுபோதையில் இ.போ.ச பேருந்து செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுக்க தடை!

மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த...

சிறுவனை சீரழித்த பிக்குவுக்கு 8 வருட சிறை!

அனுராதபுர சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு உயர் நீதிமன்ற நீதிபதி சந்துன் விதானகே,...

தீப்பற்றிய மின்சாதன கடை: புகையை சுவாசித்த குடும்பம் பலி

கடுவெலவில் உள்ள மின்சாதனக் கடை ஒன்றில் நேற்று (19) அதிகாலை ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்