யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை

Date:

யாழ். நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் மஞ்சுள செனரத்துடன் யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்றையதினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலில் யாழ். நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் முறையற்ற விதத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வர்த்தகர்கள் அசொளகரியங்களை எதிர் நோக்குவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகளால் பொலிஸ்மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நகர அபிவிருத்தி அமைச்சினால் பெருந்தொகை செலவில் அமைக்கப்பட்ட வாகன தரிப்பிடம் இருக்கும் நிலையில் அதனை செயல்படுத்துவதற்கு பொலிசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

நகர வர்த்தக நிலையங்களுக்கு முன்னாள் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு வர்த்தக நிலையங்களில் இருந்து மூன்று அடிக்கு அப்பால் வர்ணக் கோடுகள் அமைப்பதோடு வாகனங்களை அமைக்கப்பட்ட கோடுகளுக்குள் நிறுத்துவத்த வேண்டும்.

மேலும் மேலும் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான பொதுமக்கள் நகரத்திற்குள் வரும் பட்சத்தில் வாகனங்களை பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடங்களில் நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வணிகர் கழக தலைவர் ஜெயசேகரம் யாழ் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன தரப்படத்தில் மேல் அதிக வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசாரின் உதவியை நாடியுள்ளோம்.

குறித்த வாகன தரிப்பிடத்தில் நீர் வசதிகள் மலசல கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தரும் வாகனங்கள் தரித்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

ஒரு மத்தியாலத்திற்கு உட்பட்டு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது .

அதற்கு மேலதிகமாக நிறுத்தப்படும் மணித்தியாலங்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிட எண்ணியுள்ள நிலையில் அதன் விவரங்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும்.

ஆகவே யாழ் நகரப் பகுதியில் வாகன நெரிசல்களை குறைப்பதற்கு பாதுகாப்பான வாகனத் தரிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

காதலியுடன் ஆந்திராவில் பதுங்கியிருந்த சவுக்கு சங்கர் கைது!

நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு...

பிரான்ஸில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ் தாயும், மகளும்!

பிரான்சின் சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாகாணத்திற்குட்பட்ட பான்டின் (Pantin) நகரில், ஈழத்தமிழ்த் தாயும்...

அமெரிக்க, ஈரான் பேச்சுவார்த்தைக்காக பாக். தலைநகரில் 2 நாட்கள் விடுமுறை!

இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்