ஜாஎல பொலிஸ் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் முழுவதும் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு ஜீப் வண்டிக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஜீப் வண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (27) ஜீப்பை சுத்தம் செய்வதற்காக பொலிஸ் கரேஜில் நிறுத்திவிட்டு வந்து பரிசோதித்த போது அதன் கதவுகள், பொனட் மற்றும் கதவுகளில் இந்த ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜீப்பில் ஆபாசமாக எழுதியதோடு, சேதங்களையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பொலிஸ் கேராஜில் வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செயலை செய்தவர்கள் யார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1