யாழ்ப்பாணம் மாநகரசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.
இன்று (28) நடந்த வாக்கெடுப்பில் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
4 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்களிப்பில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நித்தியானந்தன் நடுவிலை வகித்தார்.
இதனடிப்படையில்6 மேலதிக வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக இலங்கை தமிழ் அரசு கட்சி, ஐதேக உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
எதிராக தமிழ் மக்கள் கூட்டணியின் 9 உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களும், சு.க, தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
வடமாகாண ஆளுனரால் யாழ் மாநகரசபை முதல்வராக நியமிக்கப்பட்ட ஆனோல்ட் சமர்ப்பித்த இரண்டு வரவு செலவு திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டதால், அவர் பதவிவிலகுகிறார்.
யாழ் மாநகரசபையின் இந்த பதவிக்காலத்தில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் ஆனோல்ட் பதவிவிலகும் இரண்டாவது சந்தர்ப்பம் இது.
யாழ் மாநகரசபையின் எஞ்சிய பதவிக்காலம், பிரதி முதல்வர் தலைமையில் செயற்படும்.