Pagetamil
விளையாட்டு

ஸ்கந்தா- மகாஜனாவிற்கிடையிலான ‘வீரர்களின் போர்’ 3ஆம் திகதி!

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி மார்ச் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மார்ச் 03,04 என இரண்டு தினங்கள் நடைபெறும் போட்டியானது இரு கல்லூரிகளின் பழைய மாணவர்களின் அனுசரனையுடன் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகள் தொடர்பாக பங்கேற்கும் அணிகளின் அறிமுக நிகழ்வும் ஊடக சந்திப்பும் இன்று(28) சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் இடம்பெற்றது.
இதன்போது கல்லூரி அதிபர்களாலும் இரண்டு அணிகளின் தலைவர்களாலும் வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் எம்.செல்வஸ்தன் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அதிபர் எம்.மணிசேகரன் அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், என்போர் கலந்து கொண்டனர்.

21ஆவது வருடமாக நடைபெறும் குறித்த போட்டி பதினொரு தடவை சமநிலையில் முடிந்ததுடன் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஐந்து தடவையும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி நான்கு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.

இம்முறை சசிகுமார் கஜித் தலைமையில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியும் ஜெயகாந்தன் கௌரி சங்கர் தலைமையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியும் களமிறங்கவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் ஓய்வு!

Pagetamil

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

Leave a Comment