கணவர் சமரசத்துக்கு மறுத்ததையடுத்து ஆற்றில் குதித்த பெண்!

Date:

பெந்தர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் தாய் நேற்று மீட்கப்பட்டிருந்தார். தனது இரண்டு பிள்ளைகளையும் பாலத்தில் நிறுத்தி விட்டே அவர் தற்கொலைக்கு முயன்றார்.

ஆற்றில் சுற்றுலா படகு சேவையில் ஈடுபடும் இளைஞன் ஒருவரே அந்த தாயாரை காப்பாற்றினார்.

“பாலத்தின் அடியில் படகில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​பாலத்திலிருந்து ஒரு சிறுவன்  ‘மம்மி, மம்மி’ என்று கத்துவது கேட்டது. ஆற்றைப் பார்த்து, ஒரு பெண் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தார். சாப்பாட்டை போட்டு விட்டு, அவரை காப்பாற்ற  என்ற அந்த இளைஞன் தெரிவித்தார்.

ஒன்றரை வயது மற்றும் ஒன்பது வயது மகனை பாலத்தில் நிறுத்தி விட்டு, 33 வயதான தாயாரே ஆற்றில் குதித்தார்.

பெந்தர ஆற்றில் சுற்றுலா பயணிகளிற்காக படகு செலுத்தி வருபவர் அந்த இளைஞன்.

நீரில் மூழ்கிய பெண்ணை நோக்கி நீந்திச் சென்ற போது, அவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும், மீண்டும் மேற்பரப்பிற்கு வந்த போது, பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு கரைக்கு நீந்தியதாகவும் கூறினார்.

கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் பலாங்கொடை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருவரையும் சமரசமாகுமாறு நீதிமன்றம் அறிவுரை கூறியிருந்தது. இதையடுத்து,  இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கணவனை சந்திக்க உரகஸ்மன்ஹந்திக்கு வந்துள்ளார். எனினும், மீண்டும் சமரசமாக கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த அவர், குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெந்தர பாலத்திற்கு வந்துள்ளார்.

பாலத்தில் பிள்ளைகளை நிறுத்தி விட்டு, 40 அடி உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

நீரிலிருந்து மீட்கப்பட்ட பெண், அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் பெந்தர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பலப்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

தான் ஆற்றில் குதித்த பின்னர் ஒன்றரை வயது சகோதரியை தூக்கிக் கொண்டு ஆற்றில் குதிக்குமாறு ஒன்பது வயதுடைய மகனிடம் தாயார் கூறிவிட்டே ஆற்றில் குதித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் தாத்தா மற்றும் சகோதரன் ஆகியோர் இன்று அளுத்கம பொலிஸாரிடம் வந்துள்ள போதிலும் தற்போது நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இரு குழந்தைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு பிள்ளைகளும் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலின் பிரகாரம் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

spot_imgspot_img

More like this
Related

கெலனி ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு கடும் வெள்ள அபாய எச்சரிக்கை!

கெலனி ஆற்றுப் படுகையின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை...

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை – சீரற்ற காலநிலை காரணம்

நிலவும் கடும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து...

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்