புத்தளம், மஹகும்புக்கடலை, வல்பலுவ பிரதேசத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு 24 மில்லியன் ரூபாவிற்கு குத்தகைக்கு வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் 50 வயதுடைய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரிவு இலக்கம் 3 இன் பொலிஸ் குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு வழங்கி 24 மில்லியன் ரூபா மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் பலரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.