Pagetamil
இலங்கை

கடமையை சரியாக செய்ததால் நீக்கப்பட்ட பொது நிதிக்குழு தலைவர்!

பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் பதவிக்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள  கண்டி மாவட்ட உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுநிதிக்கான நாடாளுமன்ற குழுவின் தலைமை பதவி எதிர்க்கட்சிகளிற்கே வழங்கப்படுவது வழக்கம்.

எனினும், ரணில்- பெரமுன அரசு இம்முறை அதில் திருகுதாளம் விட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் அதிருப்தியடைந்து, அரசு தரப்பு தாவுவார் என கருதப்பட்டு வந்த மயந்த திசாநாயக்கவிற்கு தலைமை பதவியை வழங்கியுள்ளது.

ஊழல் விவகாரங்களை மறைக்க இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதா என பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

முன்னதாக,  எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல, பொதுநிதிக் குழுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை முன்மொழிந்தார்.

எனினும், ஆளுந்தரப்பு மயந்த திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தது.

தலைவர் பதவிக்கு மயந்த திசாநாயக்கவின் பெயரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்ததையடுத்து, லக்ஷ்மன் கிரியெல்ல, திசாநாயக்கவை தொலைபேசியில் அழைத்து, பதவியை ஏற்கப் போகிறீர்களா எனக் கேட்டுள்ளார்.

அப்போது மயந்த திசாநாயக்க அந்த பதவியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ டி சில்வாவை அந்தப் பதவிக்கு நியமிக்க கட்சி முன்மொழிந்துள்ளதால், அந்தப் பதவியில் இருந்து விலகுவீர்களா என திஸாநாயக்கவிடம் கிரியெல்ல வினவிய போது, அந்தப் பதவியை ராஜினாமா செய்யத் தயாரில்லை என்றும் மயந்த தெரிவித்தார்.

இதேவேளை, கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்படும் மயந்த திஸாநாயக்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஹர்ஷ டி சில்வா ஏன் நீக்கப்பட்டார் என வினவிய போது, ​​அவர் தனது கடமைகளை சரியாகச் செய்தமையினால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!