மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென கோரி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு காசுக்கட்டளை மூலம் ரூ.500 பணம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில்-
தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு பணம் வழங்காத காரணத்தினால் நான் காசுக்கட்டளை மூலம் பணம் அனுப்பியுள்ளேன். அனைவரும் ஒத்துழைப்பு செய்வோம். தேர்தலை நடாத்த ஒத்துழைப்போம். சிறு துளி பெருவெள்ளம் ஆகட்டும். தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1