Pagetamil
இலங்கை

மின்கட்டணம் உயர்த்தப்பட்டது பொறியியலாளர்களிற்கு போனஸ் வழங்க அல்ல!

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது பொறியியலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அல்ல என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திலும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரைாளுமன்றத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஓராண்டாக நிலவிய மின்வெட்டு நிறுத்தப்பட்டது. எங்களுக்கு கூடுதல் பணம் மானியமாக வழங்கப்படவில்லை. செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். கட்டண திருத்தத்திற்குப் பிறகு, நாங்கள் கடன் வாங்க முடிந்தது. முக்கிய வங்கிகள் தேவையான நிதியை வழங்கின. அதன்படி, கொஞ்சம் எரிபொருள் வாங்கப்பட்டது. இந்த நாட்டில் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படக்கூடாது என சிலர் விரும்புகின்றனர். பொறியாளர்கள் சங்கம் போனஸ் கேட்கிறது. மேலதிக நேர கொடுப்பனவுகளை கேட்கின்றனர்.அது கிடைக்காத போது வீதியில் இறங்கி விடுவதாக கூறுகின்றனர். மின் கட்டணத்தை உயர்த்தியது போனஸ் அல்லது சலுகைகள் வழங்க அல்ல. எங்கள் செலவுகளை ஈடுகட்டவே கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சாரசபையின் நஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!