பிரபாகரன் இருக்கிறார் என சொல்லச் சொன்ன தகவலை சொன்னேன் என சர்ச்சைக்கு முடிவுகட்டியுள்ளார் பழ.நெடுமாறன்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என சில நாட்களின் முன்னர் பழ.நெடுமாறன் விடுத்த அறிவிப்பு பலத்த சர்ச்சையை உருவாக்கியிருந்தது.
நிதி மோசடி கும்பலினால் பழ.நெடுமாறன் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என பரவலாக கருதப்பட்டது.
இந்த நிலையில் தமிழக யூடியூப் சனல் ஒன்றிற்கு பழ.நெடுமாறன் வழங்கிய நேர்காணலில், பிரபாகரன் இருக்கிறார் என சொல்லச் சொன்ன தகவலை சொன்னேன் என தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் குடும்ப அங்கத்தவர்கள் அந்த தகவலை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். எனினும், யார் அந்த அங்கத்தவர் என்பதை குறிப்பிட மறுத்து விட்டார்.
பிரபாகரன் ஏன் குரல் பதிவை வெளியிடவில்லையென கேட்கப்பட்ட கேள்விக்கு, குரல் பதிவை வெளியிட்டால், அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என பதிலளித்துள்ளார்.
பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பிச் சென்றது தனக்கு தெரியுமென்றும் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்ட போது, அடுத்த கட்ட போராட்டத்தை தொடர வேண்டுமென மூத்ததளபதிகள் வற்புறுத்தி, பிரபாகரனை அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள் என்றார்.