கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள்!

Date:

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்முறை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும்; சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் மார்ச் 03 மற்றும் 04 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந் நிலையில் திருவிழா தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், 2023.03.03 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவனில் இருந்து காலை 6 மணி முதல் மு.ப 11மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிகட்டுவனில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய இரு வழிப் பயணக் கட்டணம் ரூ.2000 ஆகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் 2023.03.03 ஆந் திகதி பி.ப 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

04.03.2023 ஆந் திகதி கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவானது இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. – என்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்