மனைவி வர மறுத்ததால் நேரலையில் தற்கொலை செய்த புதுமாப்பிள்ளை!

Date:

இத்தாலிக்கு வருமாறு பலமுறை விடுத்த கோரிக்கையை மனைவி நிராகரித்ததால், மனவேதனை அடைந்த இத்தாலியில் வசிக்கும் இலங்கைக் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தனது தற்கொலையை சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார்.

நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பாக சாட்சியமளிக்கும் இறந்தவரின் சகோதரர், தானும் தனது சகோதரனும் இத்தாலியில் பணிபுரிவதாகவும், ஜனவரி 23 ஆம் திகதி நண்பர் ஒருவர் தனக்கு போன் செய்ததாகவும், தனது சகோதரனின் தற்கொலை குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் கூறினார்.

இறந்தவரின் 26 வயதுடைய மனைவி, பிபிலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். தமக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும், இத்தாலிக்கு வருமாறு கணவர் பலமுறை கூறியதாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். தற்கொலை செய்து கொள்வதாக கணவர் பலமுறை கூறியதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், மனைவி உடலை ஏற்க மறுத்ததால், இறுதிக் கிரியைக்காக இறந்தவரின் சகோதரரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...

பந்து ஈரானின் கைகளில்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில்,...

சர்ச்சைக்குரைிய படத்தை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், திங்களன்று (ஏப்ரல் 13), தனது 'ட்ரூத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்