Pagetamil
இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 35.9 கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் லொறியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட 70 முதல் 75 வயதுக்கு இடைப்பட்ட இருவரே உயிரிழந்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி தொம்கொட பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்த கார் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

வவுனியாவிற்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு: பெண் உட்பட இருவர் கைது

east tamil

Leave a Comment