யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது.
புதிய முதல்வராக இ.ஆர்னோல்ட் பதவியேற்ற பின், இன்று இந்த வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 16 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்டியடித்த ரெலோ உறுப்பினர் தனேந்திரன், ஐ.தே.க, தமிழர் விடுதலை கூட்டணி வாக்களித்தது.
எதிராக தமிழ் மக்கள் கட்சி (வி.மணிவண்ணன் தரப்பு), ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களித்தன.
முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனதை தொடர்ந்து பதவிவிலகியமை குறிப்பிடத்தக்கது.