மின்சார கட்டண அதிகரிப்பு பற்றி இணக்கப்பாடு இல்லை!

Date:

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபைக்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாட்டின்றி முடிவடைந்ததாக அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தேசிய சபைக்கு அறிவித்துள்ளனர்.

மின்சார கட்டணம் தொடர்பில் கலந்துரையாடி தெளிவான தீர்மானத்திற்கு வருமாறு தேசிய சபை நேற்று (13) மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தது.

இதன் பிரகாரம் இரு தரப்பினருக்கும் இடையில் மின்சார கட்டணம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மின்சார கட்டணம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் நாளை (15) வழங்கப்படுமென நம்புவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், இராஜாங்க அமைச்சர்களான டி.வி. சானக, இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் சாகர காரியவசம், பணிமனை பிரதானி மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் திருமதி குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

செவ்வாய் ஈரானுடன் பேச்சு- ட்ரம்ப்

ஈரான் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோஹாவில் நடைபெறும் என்றும், இதில்...

வடக்கு ஆளுனரின் முறையற்ற நடவடிக்கைக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

அதிகார பரவலாக்கல் அரசியல் தத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட வடக்கு ஆளுனரால், வவுனியா...

காதலன், நண்பர்களால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட யுவதி

மாத்தளை மாவட்டம், வில்கமுவ நகரில் தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்