மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தங்கியிருந்த அறைக்குள் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் சுமணரத்ன தேரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, துப்பாக்கிச் சூடு அவர் தங்கியிருந்த அறையைத் தாக்கியது.
துப்பாக்கிதாரி தப்பியோடியுள்ளார் என்று கூறியுள்ளனர்.
சுமணரத்ன தேரர் அண்மையில் 13வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.