Pagetamil
இலங்கை

தலைவர் குடும்பம் பிரிட்டனில் தலைமறைவாக வாழ்கிறது: முக்காட்டுடன் வந்த மனைவி, மகள் து-வாரகா; சுவிஸில் வாழ்வாதார நிதி சேகரித்த மோசடிக்கும்பல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் குடும்பத்தினர் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்வாதார தேவைக்காக நிதி திரட்டுகிறோம் என கூறி அரங்கேற்றப்பட்ட நிதி மோசடி சம்பவம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிற்சர்லாந்தில் சில வாரங்களின் முன்னர் இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளது.

பெண்ணொருவருக்கு முக்காடு போட்டு, அவர்தான் பிரபாகரனின் துணைவியாரான மதிவதனியென குறிப்பிட்டு கூட்டத்திற்கும் அழைத்து வந்துள்ளனர்.

சுவிற்சர்லாந்திலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் நிதி சேகரிப்பு பொறுப்பாளர் ஒருவரின் தலைமையிலான குழுவினராலேயே இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடப்பதற்கு சில வாரங்கள் முன்னதாகவே, சுவிற்சர்லாந்தின் சில பகுதிகளிலுள்ள தமிழ் வர்த்தகர்கள் மத்தியில் மோசடியாளர்கள் போலித்தகவலொன்றை பரப்பியுள்ளனர். பிரித்தானியாவில் இரகசியமான வாழ்ந்து வரும் தலைவர் பிரபாகரனும், துணைவியார் மதிவதனியும் சுவிற்சர்லாந்து வந்தார்கள், சில வீடுகளிற்கு வந்து உணவருந்தி விட்டு சென்றார்கள் என திட்டமிட்டு கதை பரப்பப்பட்டது.

இந்த போலித் தகவல் ஒரு குழுவினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனை பல வர்த்தகர்கள் உண்மையென நம்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் நடந்த ஓரிரண்டு வாரங்களின் பின்னர், சுவிற்சர்லாந்திலுள்ள முக்கிய தமிழ் வர்த்தகர்கள் வீடொன்றிற்கு அழைக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்டது. அது இரகசிய கூட்டமென, கலந்து கொண்டவர்களிடம் கூறப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்திற்கு, முக்காடு இட்டு, உடலை மறைத்தபடி பெண்ணொருவரும் அழைத்து வரப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் துணைவியாரான மதிவதனியே அதுவென்றும், பாதுகாப்பு காரணங்களிற்காக அவர் முக்காட்டை அகற்ற மாட்டார் என்றும் கூட்டத்திற்கு வந்தவர்களிடம் கூறப்பட்டிருந்தது.

தலைவர் வே.பிரபாகரன், மதிவதனி, துவாரகா ஆகிய மூவரும் பிரித்தானியாவில் வசித்து வருவதாகவும், மகன்களான சாள்ஸ் அன்ரனி, பாலச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்து விட்டார்கள் என்றும் வர்த்தகர்களிடம் கூறப்பட்டிருந்தது.

தலைவர் குடும்பம் பிரித்தானியாவில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதார உதவிக்காக பண உதவி செய்ய வேண்டுமென்றும் வர்த்தகர்களிடம் கேட்கப்பட்டது.

முக்காடு இட்டபடி வந்த பெண்ணும், மதிவதனியென குறிப்பிட்டு அங்கு உரையாற்றினார்.

போராட்டகாலத்தில் தாராளமாக நிதியளித்த புலம்பெயர் மக்கள், போராட்டத்தை மீள ஆரம்பிக்க தனக்கு நிதியளிக்காமல் இருக்கிறார்கள் என்ற வருத்தம் தலைவருக்கு உள்ளது என முக்காடு இட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போது நிதியளிப்பவர்களிற்கு தமிழ் ஈழம் கிடைத்த பின் வட்டியுடன் பணம் திருப்பிச் செலுத்தும் திட்டத்தையும் தலைவர் வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இஇதையடுத்து, கூட்டத்திற்கு வந்திருந்த வர்த்தகர்கள் தம்மிடமிருந்த பணத்தை வழங்கியுள்ளனர்.

ஒரு தமிழ் வர்த்தகர் மட்டும்,  பெருமளவு நிதியை பிரபாகரன குடும்பத்திற்கு வழங்கவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக துவாரகாவை நேரில் சந்திக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அவர் பிரிட்டனிற்கு சென்நு சேர்ந்த  பின்னர், துவாரகாவை சந்திக்கும் எற்பாடு செய்யப்பட்டது. இதற்குள் தனக்கு தெரிந்த நண்பர் மூலமாக  தங்போது பிரிட்டனிலுள்ள சோதியா படையணியனியின் முன்னாள் உறு்ப்பினர் ஒருவருடன் பேசி, தகவல்களை திரட்டியுள்ளார். துவாரகா தமது முகாமில் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டதை குறிப்பிட்ட அந்த சோதியா படையணி பெண் போராளி, அது பற்றி கேட்டால், போலித் துவாராக சிக்குவார் என யோசனையும் தெரிவித்திருந்தார்.

பிரித்தானியா வந்த சுவிஸ் வர்த்தகர் துவாரகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு துவாரகா என குறிப்பிடப்பட்ட பெண்ணொருவர் முக்காடிட்டபடியிருந்தார். துவாரகா முக்காட்டை விலக்குவதற்கும் பாதுகாப்பு பிரச்சினையாம்.

துவாரகாவுடன், தமிழ் வர்த்தகர் உரையாடினார். பின்னர், இயல்பாக பேசுவதை போல சில கேள்விகளை கேட்டுள்ளார்.

துவாரகா யாரிடம் வாகன ஓட்டக் கற்றுக்கொண்டார் என  சுவிஸ் வர்த்தகர் கேட்டார். ஒரு ஆணிண் பெயரை துவாரகா குறிப்பிட்டார்.

எனினும், அது தவறாதென்பது வர்த்தகரிற்கு புரிந்தது. முக்காடிட்டபடி தனக்கு முன்பாக உட்கார்ந்திருப்பது போலித் துவாரகா என்பது புரிந்து, பின்னர் தொடர்பு கொள்வதாக தெரிவித்து, அங்கிருந்து வெளியேறி விட்டார்.

பின்னர், சுவிஸிலுள்ள முன்னளி தமிழ் வர்த்தகர்களை அதை்து, தலைவர் பிரபாகரனிற்னு வாழ்வாதார உதவிவழங்குவதாக நிதி திரட்டுபவர்கள் மோசடி பேர் வழிகள் என்பதை தெரிவித்துள்ளார். அதன்பின்னர் அவர்கள் மேலதிக நிதி வழங்குவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

east tamil

ஆய்வு கூட பரிசோதனையில் வெடிப்பு: 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

திருகோணமலையில் திலீபனின் ஊர்தி தாக்குதல் தொடர்பில் மீண்டும் விசாரணை

east tamil

யோஷித ராஜபக்ச கைது

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment