மனைவி குறட்டை விட்டதால் தனது தூக்கம் கலைவதாக கூறி, அவரை அடித்தே கொன்றுள்ளார் கணவர்.
குருந்துவத்தை பொலிஸ் பிரிவின், உடஹேந்தென்ன, சுஹதகமவில் வசிக்கும் 43 வயதான பெண்ணே அடித்துக் கொல்லப்பட்டார். 65 வயதான கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
6,9 மற்றும் 14 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணுக்கும், கணவனுக்கும் இது இரண்டாவது திருமணம்.
பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த மனைவி தூக்கத்தில் குறட்டை விட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவரை தாக்கியுள்ளார். கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கணவன் கைது செய்யப்பட்டார்.
இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1