கொழும்பு தேசிய வைத்தியசாலை விடுதிக்குள் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஊழியர்!

Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் சுகாதார உதவியாளர் ஒருவரின் அலமாரியில் இருந்து 7 அதிவிசேட சாராய போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு இரகசிய தகவலின் பேரில், மருத்துவமனை நிர்வாக பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த மதுப் போத்தல்களை கண்டுபிடித்தது.

மதுபான போத்தல்களை அலமாரியில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் சுகாதார உதவியாளர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

மருத்துவமனையின் சில ஊழியர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த மது போத்தல்கள் அவரது அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சுகாதார உதவியாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்