பொதுவாக பெண்கள் புடவை அணிந்தபடி உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடுவதில்லை. பணி, விசேஷ நிகழ்வுகளுக்கு மட்டுமே சேலையை ஒதுக்குகிறார்கள். சேலையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வீணாண அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்பதால், உடற்பயிற்சிகளிற்குரிய உடைகளை பயன்படுத்துகறார்கள்.
இருப்பினும், உடற்பயிற்சி ஆர்வலரான பெண்ணொருவர் சேலை அணிந்தபடி உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
உடற்பயிற்சிக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து கொண்டு சௌகரியமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதை விடுத்து இந்த ஆன்டிக்கு எதற்கு தேவையற்ற வேலை என்றும் சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். இன்னும் சிலரோ, அந்த பெண்மணி சேலை அணிந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவதை ரசிப்பதாக தெரிவித்துள்ளனர்.
#HinduSherni.
Never imagined that she could lift the tyre with such consummate ease. 😍😍👍👍👍💪💪💪 pic.twitter.com/thLPtQIRTE— Deepak Prabhu (@ragiing_bull) February 5, 2023
உடற்பயிற்சி பயிற்சியாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரீனா சிங் என்ற பெண்ணின் வீடியோக்களே வைரலாகி வருகின்றன. அவர் சேலையில் இருக்கும் ஒவ்வொரு வீடியோவும் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ரீனா சிங் புடவையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை மட்டும் வெளியிடவில்லை, அவர் மற்ற வகையான இந்திய மற்றும் மேற்கத்திய உடைகளிலும் உடற்பயிற்சி செய்யும் பல வீடியோக்கள் உள்ளன.