26.6 C
Jaffna
March 11, 2025
Pagetamil
சினிமா

கியாரா அத்வானியை கரம்பிடித்தார் சித்தார்த் மல்ஹோத்ரா

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தனது காதலி கியாரா அத்வானியை மணந்துள்ளார். இவர்கள் திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில்vஉள்ள சூர்யாகர் அரண்மனையில் பெப்ரவரி 7ஆம் திகதி திருமணம் நடந்தது.

பாலிவுட் சினிமாவின் காதல் ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி இருவரும் நீண்ட நாள்களாகவே திருமண பந்தத்தில் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது.

2018ல் வெளிவந்த ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின்போது இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர். இதன்பின் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா படத்தில் ஒன்றாக நடித்தனர். பாக்ஸ் ஆபீஸில் இப்படம் பெரிய வசூலை குவித்தது. அதேநேரம், இந்தப் படத்தில் இருந்து இருவரும் காதலர்களாக சுற்றிவந்தனர்.

இதனிடையே, தான் நேற்று இரவு இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். கியாரா வலைதளத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து, “எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுளளார்.

திருமணத்தில் கரண் ஜோஹர், ரோஹித் ஷெட்டி என முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கியாரா அத்வானியின் பால்ய தோழியான இஷா அம்பானியும் தனி விமானத்தில் திருமணத்திற்கு வந்தார். சூர்யாகர் அரண்மனையை சுற்றிலும் ஆயுதங்களுடன் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

சித்தார்த்தும் கியாராவும் பாதுகாப்பை நிர்வகிக்கும் பொறுப்பை மூன்று ஏஜென்சிகளிடம் ஒப்படைத்துள்ளனர். ஒன்று ஷாருக்கானின் முன்னாள் மெய்க்காப்பாளர் யாசீன் கான் என்பவரால் நடத்தப்படுகிறது. இந்த ஏஜென்சியின் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் விடுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். திருமணத்தில் கலந்து கொள்ளும் சுமார் 150 விருந்தினர்களின் பாதுகாப்புக்கு அவர்கள் பொறுப்பாவார்கள்.

கியாரா அத்வானி அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் நடிக்கிறார். அதே நேரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ரோஹித் ஷெட்டி இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“குடும்பத்துடன் விரதம் இருக்கும் நயன்தாரா” – ‘மூக்குத்தி அம்மன் 2’ படவிழாவில் தயாரிப்பாளர் தகவல்

Pagetamil

காதல் முறிவு: விஜய் வர்மாவை பிரிந்தார் தமன்னா!

Pagetamil

பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Pagetamil

ஒஸ்கர் 2025: விருதுகளைக் குவித்த ட்யூன் 2, அனோரா, தி ப்ரூட்டலிஸ்ட்

Pagetamil

விஜய் சாதனையை முறியடித்த அஜித்!

Pagetamil

Leave a Comment