இரட்டைச்சதம் விளாசிய ஜூனியர் சந்தர்போல்

Date:

சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் டஜ்நரைன் (Tagenarine) சந்தர்போல் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் ஷிவ்நரைன் சந்தர்போலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணி சிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 467 பந்துகளை எதிர்கொண்டு 207 ரன்களை பதிவு செய்திருந்தார் ஜூனியர் சந்தர்போல்.

கடந்த 2022 நவம்பரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் அறிமுகமானார். சிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தப் போட்டி அவர் விளையாடும் 3வது டெஸ்ட் போட்டி. தனது 5வது டெஸ்ட் இன்னிங்ஸில் இரட்டை சதம் பதிவு செய்து அவர் அசத்தியுள்ளார். அவரது தந்தை 136வது டெஸ்ட் இன்னிங்ஸில்தான் இரட்டை சதம் பதிவு செய்திருந்தார். 370 பந்துகளை எதிர்கொண்டு 203 ரன்களை ஷிவ்நரைன் சந்தர்போல் அப்போது இரட்டை சதம் எடுத்திருந்தார். இருவரும் நொட்-அவுட் பேட்ஸ்மேன்களாக களம் திரும்பியுள்ளனர்.

தனது தந்தையைப் போலவே இவரும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார். அதே வழியில் தொடர்ந்து விளையாடி மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ரன்களை வரும் நாட்களில் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது உள்ளது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்தியதீவுகள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 447 ஓட்டங்களை பெற்ற போது, ஆட்டத்தை இடைநிறுத்தியது. ஜூனியர் சந்தர்போல் 207 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார்.

பதிலளித்தாடிய சிம்பாவே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 397 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இன்றைய 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 21 ஓட்ங்களை பெற்றிருந்தது. ஜூனியர் சந்தர்போல் 10 ஓட்ங்களுடன் களத்தில் உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பன்னிப்பிட்டியாவில் பழைய இரும்பு விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து!

கொழும்பு, பன்னிப்பிட்டிய – தெபானம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள்...

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதிய கோர விபத்து- 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20)...

நிந்தவூர் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்: ஒருவர் மீட்பு- இருவர் மாயம்

அம்பாறை மாவட்டம்  நிந்தவூர்  கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்