எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பெண்கள் இன்று பிற்பகல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் ஒரு பெண் திருமணமான பெண் என்பதும், அவரது கணவர் சில காலங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், மற்றைய பெண் திருமணமாகாதவர் என்றும், இந்த இரண்டு பெண்களும் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருவதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
69, 8- வயதுடைய இந்த இரு பெண்களில் ஒருவர் அறையொன்றில் படுக்கையிலும் மற்றைய பெண் கழிவறைக்கு அருகிலும் இறந்து கிடந்தார். சம்பவம் தொடர்பில் இதுவரை வெளிவராத நிலையில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1