பிரதிப் பிரதம செயலாளராக சுகுணரதி தெய்வேந்திரம் நாளை புதன்கிழமை கடமைகளை பொறுப்பேற்கிறார்.
வடமாகாண மனித வள முகாமைத்துவம் மற்றும் பயிற்சி நெறி பிரதிப் பிரதம செயலாளராக வட மாகாண ஆளுநரால் நியமன கடிதம் வழங்கப்பட்டது.
சுகுணரதி தெய்வேந்திரன் யாழ்ப்பாண பிரதேச செயலாளராக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இந்த கலாச்சார அமைச்சின் செயலாளராக பின்னர் பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் வடக்கு மாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்தார்.
இந்நிலையில் வடக்கு மாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சி நெறியின் பிரதி பிரதம செயலாளராக கடமை ஆற்றிய உமாமகேஸ்வரன் கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் குறித்த வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1