3வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன்!

Date:

மூன்று மாடி ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த 26 வயதுடைய நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோட்டலில் காசாளராக பணியாற்றிய இவ்வாறு இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தெனிப்பிட்டிய, வரகாபிட்டிய பகுதியை சேர்ந்த ரித்ம தரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் விசாரணையின் போது, ​​ஹோட்டல் இரவு 11 மணியளவில் மூடப்பட்டதாகவும், நள்ளிரவு 2 மணியளவில் குறித்த இளைஞன் ஹோட்டலுக்கு முன்னால் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாகவும் ஹோட்டல் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

ஹோட்டல் உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து, அவர் வந்த சில நிமிடங்களில், இளைஞன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னரே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் விழுந்த இடத்திற்கு அருகில் கவிழ்ந்த நிலையில் இருந்த மோட்டார் சைக்கிள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு யாரிடமாவது தொலைபேசியில் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது கொலையா விபத்தா என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்