பிறப்புறுப்பு வெட்டப்பட்ட நிலையில் ஒருவர் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு நண்பர்கள் ஒன்றாக மது அருந்திய போது, போதையின் உச்சத்தில் நண்பரின் பிறப்புறுப்பை மற்றையவர் பிளேட்டினால் வெட்டியுள்ளார்.
அளவிற்கதிகமாக மது அருந்தி நிலைகுலைந்திருந்த சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மற்றையவர் விளையாட்டாகவே, நண்பரின் பிறப்புறுப்பை பிளேட்டினால் வெட்டியுள்ளார்.
அந்த பகுதியிலிருந்தவர்கள் காயமடைந்தவரை மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வில்வ தல்தென பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1