Pagetamil
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை!

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்குஅவருடைய தாயார் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடுகடந்த 18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது இது ஒரு வரலாற்று மைல்கல் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

வரலாற்றில் முதல் முதலாக இந்த சிறுநீரக மாத்து சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு வரலாற்று சாதனை.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ். போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவதுசிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment