எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எடுத்துச் செல்லப்படுகிறது!

Date:

கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த MV Express Pearl கப்பல், அதன் நிறுவனத்தால் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கப்பலின் மீட்பு நடவடிக்கைகளை சீனாவில் உள்ள ஷாங்காய் சால்வேஜ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எரிந்து மூழ்கியதாகவும், கப்பலின் பாகங்கள் அதன் நிறுவனத்தினால் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்