பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் இலங்கை மின்சார சபை செயற்படத் தவறியமை தொடர்பில் எதிர்வரும் இரண்டு நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (28) தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சையின் போது மின்சார விநியோகம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மின்சக்தி அமைச்சின் எந்தவொரு அதிகாரிக்கும் அழுத்தம் கொடுக்கப்படவில்லை எனவும், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கிருந்த மேலதிக செயலாளரிடம் சட்டத்தை விளக்கியதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடலுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக செயலாளர் ஒருவரின் பங்கேற்பே இந்தப் பிரச்சினைக்கு அடிப்படையானது என ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.