25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
இலங்கை

மைத்திரியை கூண்டில் ஏற்றிய நீதிபதி!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி மீள விசாரணைக்கு அழைக்க கோட்டை நீதவான் திலின கமகே இன்று (27) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபர் மைத்திரிபால சிறிசேன கூண்டில் ஏறவில்லையென மனுதாரர் சார்பில் ஆஜரான றியன்சி அரசகுலரத்ன ஆட்சேபனை தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது வாடிக்கையாளருக்கு எதிரான தனிப்பட்ட வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கையை இடைநிறுத்தியதால், அவர் கூண்டில் ஏறவில்லையென சந்தேகநபரான மைத்திரிபால சிறிசேனவிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா  குறிப்பிட்டுள்ளார்.

இங்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் சந்தேக நபருக்கு குற்றப்பத்திரிகையை வாசித்துக் காட்டுமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை வழக்கின் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாகவும், சந்தேகநபர் கூண்டில் ஏற வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கவில்லையென நீதிபதி குறிப்பிட்டார். .

பின்னர், அந்த வழக்கில் சந்தேகநபரின் பெயரைக் கூறுமாறு நீதிமன்ற மொழிபெயர்ப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அதன் பிரகாரம், நீதிமன்ற மொழி பெயர்ப்பாளர் சந்தேக நபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயரை உரத்த குரலில் குறிப்பிட்டதையடுத்து, சந்தேக நபர் கூண்டுக்குள் பிரவேசித்தார்.

எதிர்காலத்தில் இந்த வழக்கு மீண்டும் அழைக்கப்படும் போதெல்லாம், சந்தேக நபர் அவர் இருக்க வேண்டிய கூண்டுக்குச் செல்ல வேண்டும் என நீதவான் சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் ஒரு காலை இழந்த யேசுராஜ் கணேசன் மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோரால் இந்த தனிப்பட்ட முறைப்பாடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வனவளத் திணைக்களம் மக்களிடமிருந்து திருடிய காணிகளை விடுவிக்க வேண்டும் – ரவிகரன்

east tamil

சஜித் பிரேமதாச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையே முக்கிய சந்திப்பு

east tamil

வாழைச்சேனை காகித தொழிற்சாலை மீண்டும் செயல்பட தொடங்கும் – அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

east tamil

சாலை விதியை மீறிய பஸ் ஓட்டம் – விபத்தில் 11 பேர் காயம்

east tamil

மல்லாவியில் தீவைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

Pagetamil

Leave a Comment