வீட்டு முற்றத்தில் உயிரிழந்த காட்டு யானை

Date:

காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று கடந்த புதன்கிழமை(25) உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்