வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 17ஆம்திகதி வீட்டில் யாருமற்ற நிலையில் 45வயது மதிக்கத்தக்க நடக்க முடியாத மாற்றுவலுவுடைய பெண்ணின் வீட்டார் வெளி சென்ற நிலையில் மாற்று வலுவுடைய பெண் தனித்திருந்த பொழுது வீட்டிற்குள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இருவர் தமது உடைகளை கழற்றி குறித்த பெண்ணின் முகத்தில் அந்தரங்க பின் பகுதயால் சேட்டை விட்டு குறித்த பெண் கூக்குரலிட்ட நிலையில் வீட்டிலிருந்த தொலைபேசி ஒன்றினையும் திருடி சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண் வீட்டார் வீட்டிற்கு திரும்பிய வேளை இது குறித்து தெரியபடுத்தியவேளை 18ஆம் திகதி காலை பத்து மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தாம் முறைப்பாட்டினை அளித்ததாகவும் இதுவரை பொலிசார் குறித்த மாற்று திறனாளி பெண்ணிடம் வந்து விசாரணையும் மேற்கொள்ளவில்லை எனவும் தமக்கு அயலவர்கள் குறித்த இருவரையும் அடையாளபடுத்தியுள்ள நிலையிலும் இதுவரை பொலிசார் வருகை தரவில்லை எனவும் தெரிவித்தனர்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிகாரபூர்வ இலக்கத்திற்கு தொடர்பெடுத்த பொழுது கடமையிலிருந்த அதிகாரியொரியிடம் இவ்வாறு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதா? இதுவரை ஏன் பொலிசார் குறித்த பகுதிக்கு விரையவில்லை என வினவிய பொழுது இப்பொழுதே விரைகின்றோம் என தெரிவிக்கப்பட்டது.
இருந்தும் வட்டுக்கோட்டை பொலிசார் குறித்த பகுதிக்கு விரையவில்லை என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி பெண்ணின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.