உள்ளுராட்சி மன்றத் தேர்தல் 2023 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை 11 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 2 சுயேச்சைக்குழுக்களும்
தாக்கல் செய்துள்ளன.
கரைச்சி பிரதேச சபைக்கு 11 அரசியல் கட்சிகளும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சுமந்திரன் அணி சுயேச்சைக்குழுவாகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு பத்து கட்சிகளும், ஒரு சுயேச்சைக்குழுவும், பூநகரி பிரதேச சபைக்கு ஒன்பது அரசியல் கட்சிகள்
வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன.
அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி, சமத்துவக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஈழமக்கள் ஐனநாயக கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்கள் இரண்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.