உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி புதன்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று (21) நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
இதற்கிடையில், தேர்தலுக்கான வைப்புத்தொகையை ஏற்கும் பணி நேற்று நண்பகலுடன் நிறைவடைந்தது.
தேர்தலுக்கான வேட்புமனுத் தேதிகள் இம்மாதம் 4ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் திகதி விரைவில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1