29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஐரோப்பிய ஆட்கடத்தல் வலையமைப்பு சிக்கியது: 14 இலங்கையர்களிற்கு சிறைத்தண்டனை!

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை நடத்திய குற்றத்திற்காக 14 இலங்கை பிரஜைகளுக்கு வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

செரிஃபோன்டைன் கிராமத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் இருந்து நடவடிக்கையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபருக்கு, ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உக்ரைனில் இருந்து அகதிகளை ஐரோப்பிய கண்டம் முழுவதும் கடத்தியுள்ளனர். குறிப்பாக, இலங்கை மற்றும் பங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நகர்த்துவதற்கான விலைகளையும் வழிகளையும் கடை உரிமையாளரான இலங்கையர் நிர்ணயித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மற்றொரு சந்தேக நபருக்கு, நாடு கடத்தல் கோரிக்கைகளை எதிர்த்து போராடி வருபவர், பியூவாஸ் நீதிமன்றத்தால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மற்றவர்களுக்கு குறைந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

சமீப வருடங்களில் ஐரோப்பாவை நோக்கி குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடத்தல் கும்பல்கள் அதிகரித்து வருகின்றனர். பலர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குச் செல்லலாம் என்ற நம்பிக்கையில் ஐரோப்பாவிற்கு புலம் பெயர்கிறார்கள்.

பிரிட்டன் அரசாங்க புள்ளிவிவரங்களின்படி. 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடந்து 45,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் பிரிட்டன் சென்றுள்ளனர். 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை  17,000 ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment