27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இந்தியா

4வது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் முத்தலாக் கொடுத்தவர் கைது!

நான்காவது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தவர் மீது மத்திய பிரதேசத்தின் இந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் இம்ரான் (32). இவருக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ளன. இத்தகவலை மறைத்து திருமண இணையதளத்தில் வரண் தேடியுள்ளார். ஏற்கெனவே விவாகரத்தாகி குழந்தைகளுடன் இருக்கும் மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரை தேர்வு செய்து 4வது மனைவியாக்கியுள்ளார். அவரது குழந்தைகளையும் சேர்த்து கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார். இம்ரானுக்கு ஏற்கெனவே 3 மனைவிகள் இருப்பது தெரிந்தவுடன், அவருக்கும், 4வது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இம்ரான் தனது 4வது மனைவிக்கு எஸ்எம்எஸ் மூலம் ‘தலாக், தலாக், தலாக்’ என தகவல் அனுப்பியுள்ளார்.

இது குறித்து இந்தூர் போலீஸில் இம்ரானின் 4வது மனைவி புகார் கொடுத்தார். முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி இம்ரான் மீது இந்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சட்டத்தின்படி முத்தலாக் கொடுத்தவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் ஏன்? – மத்திய அரசு முன்வைக்கும் காரணங்கள்

Pagetamil

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைது

Pagetamil

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

Leave a Comment