நுவரெலியா நானுஓயா வீதியில் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் வான் என்பன மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் கல்விச் சுற்றுலா சென்ற பேருந்தே விபத்திற்குள்ளானது.
பேருந்தில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வானில் பயணித்த 6 பேரும், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி மீதும், பின்னர் வான் மீதும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
பேருந்து 40 அடி பள்ளத்தில் வீழ்ந்திருப்பதால், மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

