கோடீஸ்வரரின் மகள் 9 வயதில் துறவறம்

Date:

குஜராத்தில் பிரபலமான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் தானேஷ் மற்றும் அவரது மனைவி அமி சங்வி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், 9 வயது மூத்த மகள் தேவன்ஷி என்பவர் கோடிகளை துறந்து தான் விரும்பிய எளிய துறவற வாழ்க்கைக்கு மாறியுள்ளார். இவருக்கு நான்கு வயதில் தங்கை ஒருவரும் உள்ளார். இந்த நிலையில் ஆசா பாசங்களை துறந்து அவர் துறவறத்தை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஜெயின் துறவி ஆச்சார்யா விஜய் கீர்த்தியாசூரி பங்கேற்று நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தேவன்ஷி துறவறம் பூணுவதற்கான தீட்சை வழங்கினார்.

இதுகுறித்து குடும்ப நண்பர் நிரவ் ஷா கூறும்போது, ‘‘தேவன்ஷி சிறுவயதிலேயே துறவிகளுடன் 700 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு அவர் இந்த துறவற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்’’ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்