24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
குற்றம்

நெல்லியடியில் பொங்கல் செலவிற்கு சங்கிலி அறுத்த மாம்பழமும், நண்பனும் கைது!

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோகத்தரான பெண் ஒருவரின் 2 பவுண் சங்கிலியை அறுத்த இரண்டு பேர், பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி வேலையிலிருந்து வீடு திரும்பிய பெண்ணின் 2 பவுண் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து சென்றுள்ளனர்.

சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டு, திருடர்கள் இனம் காணப்பட்டனர்.

சாவகச்சேரியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் சாவகச்சேரியை சேர்ந்த மாம்பழம் என அழைக்கப்படும் 23 வயதுடைய இளைஞன் கைதாகினான்.

மற்றைய திருடன் இன்று நெல்லியடி பொலிசாரிடம் சரணடைந்தான்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தைப்பொங்கல் செலவிற்காக சங்கிலி அறுத்ததாக தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட சங்கிலியை ஒரு இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்ததாக தெரிவித்தனர்.

நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு திருட்டுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

நெல்லியடி பொலிசார் சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார்  ஈடுபட்டுள்ளனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment