அம்பாறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

Date:

அம்பாறை மாவட்டத்தில் எரிபொருளுக்காக மக்கள் முண்டியடிப்பதை காண முடிந்தது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை(18) இரவு முதல் பெற்றோல் நிரப்புவதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்தனர்.

கடந்த காலங்களில் கியூ.ஆர் முறைமையினால் சீராக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விநியோகம் திடீரென இவ்வாறு நெருக்கடிக்குள்ளானமை மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் கடந்த காலங்களில் எரிபொருள் நிலையத்தை சூழ ஒன்று கூடியவாறு நிற்பதையும் அதிகளவான வாகனங்கள் எரிபொருள் நிலையங்களை நாடி செல்வதையும் காண முடிகின்றது.

மேலும் நாடளாவிய ரீதியில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை சாய்ந்தமருது, மருதமுனை பகுதிகளில் பெற்றோல் இன்மையினால் பொதுமக்கள் திரும்பி செல்வதுடன் டீசல் எரிபொருள் சீராக இப்பகுதிகளில் விநியோகிக்கப்படுகின்றது.

-பாறுக் ஷிஹான்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பில் சூம் வழியாக கலந்து கொண்ட தமிழ் தேசிய பேரவைக்கு எதிர்ப்பு!

தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல்...

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்