24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

தென்னையின் கீழ் படுத்திருந்தவர் தேங்காய் விழுந்து பலி

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வசித்துவந்த நபர் ஒருவர் தேங்காய் விழுந்து உயிரிழந்துள்ளார்.

சாரதியாக பணிபுரியும் குறித்த நபர் கடந்த 16ம் திகதி வாகனத்தை நிறுத்திவிட்டு தென்னை மரத்தின் கீழ் படுத்திருந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இதன்போது அவரது நெஞ்சுப் பகுதி மீது தேங்காய் விழுந்தது.

அதனையடுத்து அவர் நேற்றையதினம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அராலி மத்தியைச் சேர்ந்த சிவானந்தன் கஜாணன் (39) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரதேச பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment