மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இருபது இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெறும்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவினால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
உடுவான்கந்த வலகடய பிரதேசத்தில் வசிக்கும் தர்மதிலக பண்டா என்பவரால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றின் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பிரதேச சபைக்கு தலைவர் இருபது இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை மாவனல்லை நகரில் உள்ள ஹோட்டலில் பிரதேசசபை தலைவரிடம் பணத்தை கொடுத்த போது கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1